பேஸ்புக் பக்கங்கள்: பேஸ்புக்கும் வின்டீசலின் மொட்டைத்தலையும்!
Jan 20, 2010
ஹாலிவூட் ஆக்சன் ஹீரோ வின்டீசல் பேஸ்புக்கில் இருக்கிறார். பொழுதுபோகாவிட்டால் மனுஷன் பேஸ்புக் வந்து ஏதாவது ஸ்டேடஸ் போடுவாரு போல... போட்டு அடுத்த சில செக்கன்களில் அதற்கு பத்துப் பதினோராயிரம் லைக்ஸ் விழுந்துவிடும்!
இந்த லைக்ஸில் ஒரு மேட்டர் இருக்கிறது பாருங்கள்... பேஸ்புக்கில் உங்கள் ஸ்டேடஸுக்கு கிடைக்கும் கமெண்ட்சை விட அதற்குக் கிடைக்கும் லைக்சை வைத்துத்தான் உங்கள் மதிப்பு கணக்கிடப்படுகிறது! அதிலும் குறிப்பாக கேர்ள்ஸ் அதிகமாக லைக் பண்ணியிருந்தால் நீங்கள்தான் ஹீரோ! எழுதப்படாத இந்த பேஸ்புக் விதியால் பிரெண்ட்ஸ் மற்றும் சட்டில் வரும் முன்பின் தெரியாதவர்களிடமெல்லாம் ஸ்டேடஸ் லைக் பண்ணுமாறு கேட்பதிலிருந்து கேர்ள்பிரெண்டிடம் கெஞ்சியோ கொஞ்சியோ அவளின் பேஸ்புக் பாஸ்வேர்ட் வாங்கி அவள் பெயரில் வந்து தன் ஸ்டேடசையே லைக் பண்ணும் (ஊப்ஸ்! உண்மையச் சொல்லித்தொலச்சிட்டனா?) கேலிக்கூத்தெல்லாம் நடக்கும்!
விடுங்கள்... நான் சொல்லவந்தது இதுவல்ல! இப்படி ஒரு பத்து லைக் அள்ளுவதற்குள் நமக்கு நாக்குத்தள்ளிவிடும்! நம்ம மேட்டர் இப்படியிருக்க வின்டீசல் வந்து பத்தாயிரம் பதினோராயிரம் என்று லைக் அள்ளுவதாவது? அதுவும் ஒரு மொக்க ஸ்டேடஸுக்கு? என்று எல்லோருக்கும் வயிற்றெரிச்சல்! அப்படித்தான் ஒருநாள் நாங்கள் பிரெண்ட்ஸ் எல்லாம் ஒன்றாக பேஸ்புக் பண்ணிக்கொண்டிருந்தபோது (?!) வின்டீசல் ஒரு ஸ்டேடஸ் போட்டார்! அவ்வளவுதான்! வழக்கம்போல ஆயிரக்கணக்கில் லைக்ஸ் கூடிக்கொண்டே போனது! இதைப்பார்த்துக் கடுப்படைந்த என் பிரெண்டொருத்தன் சொன்னான்: "பாரு மச்சான்! இந்த மொட்டையனுக்கு எவ்ளோ லைக்ஸ் வுளுது!"
ஹி... ஹி... பாருங்கள், வின்டீசல் யாரு... அவுரு எவ்ளோ பெரிய ஆளு... இதெல்லாம் மறந்து அவருக்கு மொட்டைத்தலை என்ற மேட்டர்தான் இங்கு பெருசாப்போச்சு! எங்குபோனாலும், என்னசெய்தாலும் நம்மாளுங்க நம்மாளுங்கதான்!
Labels: இன்டர்நெட், ஜோக், பேஸ்புக், வாழ்க்கை