<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

நானும் ஒரு நரிக்குறவனாகலாம் என்றிருக்கிறேன்!

Jan 24, 2010

இன்று க்ளாஸ் விட்டு 155ம் நம்பர் பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன்... ஹாய் பிரெண்ட்ஸ்! நான் இத சொல்லியே ஆகணும்! 155ம் நம்பர் பஸ் அவ்ளோ க்ரவ்ட்! முன்பெல்லாம் இந்த பஸ்சில்தான் அதிகமா குண்டு வெடிக்கும்! இப்போ அதிகமா செல்போன்கள் திருட்டுப் போகின்றன! (நான் கூட ஒரு செல்போன் தானம் பண்ணியிருக்கேன்!)

சரி... நம்ம மேட்டருக்கு வருவோம்! மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்னால ஒருத்தன் ஓடிவந்து 155ல் ஏறினான்! அவன் எப்படியிருந்தான் என்று அவசர அவசரமாக வர்ணித்துவிடுகிறேன்: "அவனுக்கு என் வயசுதானிருக்கும். வெள்ளை ஸ்போர்ட்ஸ் பூட்ஸ், உடம்போடு அப்பிப்பிடித்திருக்கும் பளபள கறுப்பு ஜீன்ஸ், தொளதொள சிவப்பு டீஷர்ட், கழுத்தில் நாய்ச்சங்கிலி போன்றிருந்த பெரியதொரு சங்கிலி, ஒரு கையில் தொளதொளவென்று வாட்ச், இன்னொரு கையில் கறுப்பாகப் பெரியதொரு பிளாஸ்டிக் பட்டையொன்று கட்டியிருந்தான், ஒரே மோதிரத்தை இரண்டு விரலுக்கும் சேர்த்து அணிந்திருந்தான், ஒற்றைக்காதில் காங்கிரீட் ஆணியொன்றைக் (?!) குத்தியிருந்தான், வெள்ளை பிரேம் போட்ட கூலிங்கிளாஸ் போட்டு கன்னாபின்னான்னு முடி வளர்த்து அதுக்கு செம்பட்டைக் கலர் டை வேறு அடித்துத் தொலைத்திருந்தான்! சரியான நரிக்குறவன்! நரிக்குறவன் என்று சொல்லி உண்மையான நரிக்குறவர்களை அவமானப்படுத்த விரும்பவில்லைதான்... ஐம் சாரி... பட் எனக்கு இதைவிட அழகான வேறு வேர்ட் கிடைக்கவில்லை!

கொழும்பில் இப்படிப்பட்ட நரிக்குறவர்களைக் காண்பது ஒன்றும் அதிசயமில்லைதான்! வெஸ்டர்ன் கல்ச்சர் என்று சொல்கிறார்கள்... எனக்கும் வெஸ்டர்ன் கல்ச்சர் ரொம்பப்பிடிக்கும்தான்! ஆனால் அதுக்காக இப்பிடியா? என் ப்ரெண்ட்டொருத்தன் சொன்னான்: நியூயார்க்ல, லண்டன்ல இப்படி நரிக்குறவன் வேஷம் போட்டிருந்தால் நீங்கள் ஒரு "கே" என்று அர்த்தம் என்று!

இதில் ஒரு வருத்தம் என்னவென்றால், இங்குள்ள கேர்ள்சுக்கு நரிக்குறவர்கள் என்றால் ரொம்பப்பிடிக்கும்போல! இதுக்காவே முக்காவாசிப் பேர் இங்க நரிக்குறவன் வேஷம் போட்டுட்டு திர்றானுக! நான்கூட பலமுறை "இந்த நாய்க்கு இவ்ளோ அழகான கேர்ள்ப்ரெண்டா? இவன்ல அவ அப்பிடி என்னத்தக்கண்டா?" என்று பொறாமைப்பட்டிருக்கிறேன் (?!).

ஸோ, நானும் ஒரு நரிக்குறவனாகலாம் என்றிருக்கிறேன்!

Labels: , , ,