<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

சிங்கிளா இருக்கிற சிங்கங்களுக்கு...

Feb 8, 2010

அடுத்த வாரம் காதலர் தினம் வருது... இங்க இப்பவே அலப்பறை பண்ணத் தொடங்கிட்டானுங்க! சென்ற காதலர் தினமும் இப்பிடித்தான்... அந்த நாளே சிவப்பாத்தான் விடிஞ்சுது! ரோட்ல போறவன் வாறவன்லாம் சிவப்புக் கலர் டிரஸ் போட்டுக்கிட்டுப் போறான்! என்னடான்னு கேட்டா காதலர் தினமாம்! க்ளாஸ்லயும் எல்லாரும் சிவப்பு டிரஸ்! சரியாப்போச்சு! சிவப்பு டிரஸ் போடாத என்ன எல்லாரும் மட்டமாப் பாக்குற மாதிரியே ஒரு பீலிங்! இதாவது பரவால்ல! எல்லாரும் ஜோடி ஜோடியா திர்றாங்களா... அந்த வயித்தெரிச்சல் வேற! ஸோ இந்தக் காதலர் தினத்துக்கு ஊர்சுத்தப் போற ஐடியாவே இல்ல! நீங்களும் என்னப்போல சிங்கிளா இருக்கிற சிங்கமா? வாங்க, இந்த நாள எப்டிக் கொண்டாடலாம்னு (?!) ஐடியா போடுவம்!

காலைல ஏர்லியா எழுந்து அடுத்த வருசமாச்சும் இந்த நாள்ல சிங்கிளாருக்கக் கூடாதுன்னு கடவுள வேண்டிக்கோங்க!

இவ்ளோ நாளா முடிக்காம இருந்த அசைன்மென்ட், ஹோம்வேர்க் எதாச்சும் இருந்தா (கண்டிப்பா இருக்கும்!) அத முடிக்க ட்ரை பண்ணுங்க! இல்லேன்னா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் வெளாடுங்க! படம் பாருங்க! பாட்டுக் கேளுங்க! ஆனா அதுக்காக ரொமாண்டிக் படங்களப் பாத்தோ பாட்டுக்களக் கேட்டோ தொலைக்காதீங்க!

பழக்கதோஷத்துல பேஸ்புக் பக்கம் போய்டாதீங்க! அன்னிக்கு பேஸ்புக்ல நடக்குற அட்டகாசம் தாங்காம தற்கொலை செஞ்சுக்குற ரேஞ்சுக்குப் போனாலும் போயிடுவீங்க! பொதுவா இன்டர்நெட் யூஸ் பண்ணாம இருக்கிறது பெட்டர்!

உங்களப் போலவே சிங்கிளா இருக்கிற பிரெண்ட்ஸ போய் மீட் பண்ணுங்க! ரொம்பவே தனிமையா பீல் பண்ண வேண்டாமில்லே!

இதெல்லாத்தயும் விட முக்கியமான இன்னொரு மேட்டர் இருக்கு! காதலிக்கிற உங்க பிரெண்ட்ஸ்கிட்ட இந்தக் காதல் கீதல்னு அலையாம ஒழுங்காப் படிச்சு உருப்பர்ற வழியப்பாருன்னு அட்வைஸ் (?!) பண்ண மறக்காதீங்க! ஓகேவா?

Labels: , , ,