கொழும்பில்... காதலர் தினத்தில்...
Feb 15, 2010
காதலர் தினம் வந்துச்சு... காதலர் தினம் போயிடுச்சு... ஆனா இந்தத் தடவை காதலர் தினம் சற்றே டல்லடித்தது போல ஒரு பீலிங்! எதிர்பார்த்தது போல யாருமே பெருசா அலப்பறை பண்ணல! சென்ற காதலர் தினத்தில் சிவப்புக் கலர் டிரஸ் போட்டுக் கலக்கித்திரிந்த கூட்டம் இம்முறை மிஸ்ஸிங்! வாட் ஹெப்ன்ட் யூ கைஸ்?
எனக்கென்றால் சென்ற காதலர் தினம் போல இம்முறை தனிமை வாட்டவில்லை! இந்த ஒரு வருசத்துல என் லைப் ரொம்பவே சேன்ச் ஆயிடுச்சு... கூடவே மனசும்! ஸோ காதலர் தினத்தன்று வெளியே தலைகாட்டுவதில்லை என்றிருந்தவன் ப்ரெண்ட்ஸ் கூடச் சேந்து ஊர் சுத்தக் கெளம்பினேன்!
சிட்டில எங்க பாத்தாலும் கப்பிள்ஸ்! கப்பிள்ஸ்! கப்பிள்ஸ்! வழக்கம் போல கேர்ள்பிரெண்ட் எவ்ளோ அழகா இருப்பாளோ அவ்ளோ அசிங்கமா போய்பிரெண்ட் இருக்கான்! (எக்ஸ்கியூஸ்மீ! எப்பிடீங்க இப்பிடியொரு மூஞ்சிய வச்சிக்கிட்டு இவ்ளோ அழகான கேர்ள்ல கவுத்தீங்க?)
மெஜஸ்டிக் சிட்டி... கொழும்பில் காதலர்களின் மீட்டிங் ஸ்பொட்களில் ஒன்று! நம்ம கதைல இங்கதான் ஒரு ட்விஸ்ட் வருது! என் ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன்கிட்ட அவனோட எக்ஸ் கேர்ள்பிரெண்ட் (அவ இவன விட்டுட்டு இன்னொருத்தனோட போயிட்டா!) பத்திச் சொல்லிட்டிருந்தான்... திடீர்னு பாத்தா முன்னால இருக்கிற டேபிள்ல அதே கேர்ள் அவளோட புது போய்பிரெண்ட்டோட! எப்பிடி இருக்கும் ப்ரெண்டுக்கு! எலெக்ட்ரிக் ஷோக் வாங்கினவன் மாதிரி ஆயிட்டான்! அவளும் இவனக் கண்டுட்டாள்... உடனே தள்ளியிருக்கிற இன்னொரு டேபிளுக்குப் பறந்துடாள்! ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இதே இடத்த இவங்க ரெண்டு பேரயும் ஒண்ணாப் பாத்திருக்கேன்! இப்போ தனித்தனியா!
அப்புறம் க்வீன்ஸ் கபே போனோம்! அங்க... அது என்ன விளயாட்டு? சினிமால்ல காட்டுவாங்களே அரையிருட்டுல பணக்கார வில்லன் டேபிள் மேல இருக்கிற போல்ஸ்ல ஒன்னக் குச்சியால தள்ளிட்டு ம்ம்ம்... அவன் கதைய முடிச்சிடுன்னு சொல்லுவாரே? அந்த விளயாட்டு விளயாடிட்டு அப்பிடியே கோல்பேஸ் போனோம்!
கோல்பேஸ்ல இது மாதிரி ஒரு க்ரவ்ட் நான் கண்டதேயில்ல! அவ்ளோ க்ரவ்ட்! கொழும்புல இருக்கிற அத்துன அழகான கேர்ள்சும் வந்திருந்தாளுவள் போல! எவளப்பாக்குற எவள விடுறன்னே தெரியல்ல! ஒரு வழியா அந்தக் க்ரவ்ட்ல பூந்து புறப்பட்டுப் போய்டே இருந்தோம்!
எங்க முன்னால ஒருத்தி வர்றாள்... ப்ரத்டேகிங் என்று சொல்லுவோமே... அத அப்பதான் பீல் பண்ணினேன்! பேமிலியோட வர்றாள்... அந்த பேமிலியே அழகாத்தான் இருந்துச்சு... எங்களக் கடந்து போறாள்... எல்லாருக்கும் பத்திக்கிச்சு! விடுவமா? ஒரு ரிவர்ஸ் அடித்துத் திரும்பினோம்! ஒரு தடவ பாத்தோம்... ரெண்டு தடவ பாத்தோம்... ம்ஹூம்! போதாது! ஸோ அவ பின்னாலயே நாயா சுத்தினோம்! இதுக்குள்ள இன்னொரு குரூப் ஒண்ணும் வருது... "நான் லவ் பண்ணினா இவளத்தாண்டா பண்ணுவன்!" எண்டு ஒருத்தன் கத்துறான்! அவ கோல்பேஸவிட்டுக் கெளம்பும் வரைக்கும் வேற எவளயும் ரசிக்கல! அவ கெளம்பிப் போயிட்டா! செல்போன் நம்பர், பேஸ்புக் ஐடி தராமலே! (அவ எப்பிடித் தருவா? கேட்டாத்தானே தருவா? எங்கள்ள ஒருத்தனுக்கும் அவ்ளோ தில் இல்ல!)
ம்ஹூம்... முடியல... டைப் பண்ணிப் பண்ணி கையெல்லாம் வலிக்குது! அதனால...
அப்புறமா அங்கேயே கொஞ்ச நேரம் சுத்தியடிச்சோம்... வாறவள், போறவள எல்லாம் பாத்தோம்... பொட்டேட்டோ சிப்ஸ் சாப்பிட்டோம்... அப்பிடியே கெளம்பி பஸ் புடிச்சு வூட்டுக்கு வந்து சேந்தோம்! டொட்டடொய்ங்!