<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

திரைப்படமாகிறது டின்டின்!

Feb 18, 2010

டின்டின்... இந்தப் பெயரக் கேள்விப்பட்டிருக்கீங்க இல்லியா? ஹெர்ஜ் என்ற பெல்ஜியம் நாட்டு ஆர்டிஸ்ட் உருவாக்கின அட்டகாசமான கார்ட்டூன் தொடர்! தன் பேமிலி மெம்பர்ஸ இன்ஸ்பிரேஷனா வெச்சே டின்டின் தொடர்கள்ல வர்ற கேரக்டர்கள டிசைன் செஞ்சாராம் ஹெர்ஜ்!

டின்டின், கெப்டன் ஹெடொக், புரபசர் கல்கியூலஸ், ஜோன்சன் ட்வின்ஸ், பியங்கா கெஸ்டபியர் மற்றும் டின்டினின் செல்ல நாய்க்குட்டி ஸ்நோவி... இவங்கதான் டின்டின் தொடர்கள்ல வர்ற மெய்ன் கேரக்டர்கள்!

எனக்கென்னடான்னா டின்டின விட அவரோடத் திரியுற கெப்டன் ஹெடொக்கைத்தான் பிடிக்கும்! இவரு ஒரு அரை லூசு... குடிகாரன்... அத்தோட வலியப்போய் வம்புல மாட்டிக்கொள்ற ஆளு! இவரு பண்ற அலப்பறைகளே டின்டின் தொடர்களின் ஹைலைட்!

ம்ம்ம்... டின்டினப் பத்தி இவ்ளோ இன்ட்ரோ போதும்னு நினைக்கிறேன்! இன்னும் டீட்டெய்ல் வேணுமின்னா விக்கிபீடியா போங்க! அங்கதான் டின்டினப் பத்தி பிஎச்டியே செய்யுற அளவுக்கு வேல மெனக்கெட்டு எழுதியிருக்கானுங்க! இப்போ மேட்டர் என்னன்னா... நம்ம ஸ்பில்பேர்க் இருக்காருல்ல, அவுரு டின்டினப் படமா எடுக்கப்போறாராம்!

விசுவல் எபக்ட்ஸ் இல்லாம ஸ்பில்பேர்க் படமா? இந்தப்படத்த அவதார்ல யூஸ் பண்ணின அதே மோஷன் கெப்சர் டெக்னோலஜில எடுக்கப் போறாராம்! சூப்பரா இருக்கும்ல? அட்வென்ச்சர்ஸ் ஒப் டின்டின்: சீக்ரெட் ஒப் தி யுனிகோர்ன் என்ற பேர்ல 2011ல வருது இந்தப்படம்!

Labels: , ,