<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

குட்பாய் பேஸ்புக்! ஹலோ ட்விட்டர்!

Mar 12, 2010

ஹாய் ப்ரெண்ட்ஸ்! ஹவ் யூ? ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றோம்ல? என்ன செய்ய? லைப் எப்பவுமே சந்தோசமா இருக்கிறதில்லியே... என் பேஸ்புக் பிரெண்ட் ஒருத்திய மீட் பண்ணப்போய் அத எவனோ ஒருத்தன் வீட்ல போட்டுக்கொடுத்து பெரிய ப்ராப்ளம் ஆயிடுச்சு! மனசே சரியில்ல... எல்லாம் இந்த சனியன் புடிச்ச பேஸ்புக்கால வந்தது! இந்த ஸ்டோரிய அப்புறமா எழுதுறேன் சரியா?

ஹெரோயின் போன்ற ஒன்றுதான் இந்த பேஸ்புக்கும்! அதுக்கு நாம அடிக்ட் ஆயிட்டோம்னா அவ்ளோதான்! மெயில் செக் பண்ணறது, நெட்ல ரீசர்ச் பண்றது, அசைன்மென்ட் பண்றது எதுவுமே நடக்காது! இத விடுங்க... நீங்க வீட்டவிட்டு வெளிய வாறது, உங்க நிஜ ப்ரெண்ட்ஸ் கூட பேசுறது, பழகுறது எல்லாமே நின்னு போயிடும்! உங்க லைப் நரகமாயிடும்!

பேஸ்புக் வேணாம்னு விட்டப்புறம் நான் எவ்ளோ ப்ரீயா பீல் பண்றேன் தெரியுமா? எவ்ளோ டைம் மிச்சமாகிறது தெரியுமா? இல்லேனா காலைல எந்திரிச்ச உடனேயே பேஸ்புக் போய் காலைல கடைகள்ல அன்னிக்கு பிசினஸ் நல்லா நடக்கனும்னு துதிப்பாடல் எல்லாம் போடுவாங்க இல்லியா? அந்த ரேஞ்சுக்கு நெட்ல தேடி ஒரு வாழ்த்தோ, பொன்மொழியோ ஸ்டேட்டஸ்ல போடுறது... அப்புறம் அவன், அவள்னு தேடித்தேடி பிரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புறது... போட்டோ, வீடியோ டெக் பண்றது... சட் பண்றது... வோல்ல எழுதுறது... மாபியா வார்ஸ், பார்ம்வில்லி விளாடுறதுன்னு அந்த நாள் புல்லா செம பிசினஸ் நடக்கும்!

பேஸ்புக்க விட்டுட்டா வேறென்ன பண்றது? இருக்கவே இருக்கு ட்விட்டர்! போட்டோ, வீடியோ, சட், அப்ஸ் எதுவுமே ட்விட்டர்ல கிடையாது! ஒன்லி டெக்ஸ்ட் மட்டும்தான்! அதுவும் 140 எழுத்துக்கள் மட்டும்! ட்விட்டர்ல வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கு! பிரெண்ட்ஸ், நீங்களும் ட்விட்டர்ல இருக்கீங்களா? இருந்தா பொல்லொவ் மீ!

Labels: , , , ,