<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்?

Apr 18, 2010

ஹாய் பிரெண்ட்ஸ்! ரிமெம்பர் மீ? ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றோம்ல? பிளாக் பண்ண டைம் இல்லண்ணு சொன்னா நீங்க நம்பிடவா போறீங்க? வேலவெட்டி ஒண்ணுமில்லாம சும்மாதானே இருக்கே நீன்னு பிரிச்சு மேஞ்சிட மாட்டீங்க? உண்மைய சொல்லணும்னா கடந்த சில வாரங்களா பிளாக் பண்ற மனநிலைல நான் இல்லப்பா! சரி அத விடுங்க... அது என்னோட சொந்த சோகம். அத தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க?

விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்தேன். எனக்குத்தெரிஞ்சி தமிழ் சினிமாலேயே காதல் கதைகளை ரொம்ப அழகா சொல்லக்கூடியவரு கௌதம் மேனன். வாரணம் ஆயிரம் பாத்ததுலருந்து கௌதம் மேனன் படம்னாலே ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சி... விண்ணைத்தாண்டி வருவாயா ஏமாற்றவில்லை! இலேசாக மழை தூறும் டிசம்பர் மாதத்து விடியலில், இதமான குளிரில், ஆவி பறக்கும் ஒரு கப் காப்பியை ரசித்துப் பருகியிருக்கிறீர்களா? இப்படமும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு உணர்வைத் தந்தது! "நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்?" என்று இப்படம் முழுதும் வரும் கேள்வி என்னை என்னவோ செய்கிறது! பையாவையும் பார்த்தேன். கௌதம் மேனன் எடுத்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோனு தோணிச்சு! படத்தில் வரும் மொக்கை பைட் ஸீன்களை மறந்துவிட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு அழகிய காதல் கதையே! ரெண்டு படத்துலேயும் பாடல்கள் ரொம்ப நல்லாருந்துச்சு. அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஊணே உயிரேயும், பையாவில் வரும் பூங்காற்றே பூங்காற்றேயும் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!

இங்லிஷ் கலக்காமல், இரைச்சல்கள் கலக்காமல் சுத்தத் தமிழில் இப்படியான மனதை மயக்கும் பாடல்களைக் கேட்கும்போது தமிழ் இவ்வளவு இனிமையான மொழியான்னு ஆச்சரியமாயிருக்கு! அதே சமயம் தமிழ் தெரிந்திருந்தும் தமிழில் பேசினால் அவமானமெனக்கருதி நுனிநாக்கு இங்லிஷ் பேசித்திரியும் மனநோயாளிகளின் நினைவும் வருகிறது! அட, சுத்தத் தமிழில் பேசவேண்டாம்... தமிழில் இங்லிஷ் கலந்து பேசினாலும் பரவாயில்லை... ஆனால் தமிழ் பேசவே மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது?

எழுதனும்னு தோணிச்சு... மனசுல இருந்தத எழுதிட்டன்... ம்ம்ம்... அப்புறம் என்ன? கொழும்பு தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடிக்கிட்டிருக்கு... தெருத்தெருவா, கடைகடையா புத்தாண்டுக்காக டெகரேட் பண்ணிருக்காங்க... ஜோடி ஜோடியா ஷாப்பிங் பண்றாங்க... அப்பப்போ மழை பெய்யுது... மழை பெஞ்சா இந்த நகரம் நரகமாயிடும். ஆனா இங்க இந்த மழை மட்டும்தான் எனக்குப் புடிச்சிருக்கு... பாருங்க, இப்பகூட மழை பெஞ்சிக்கிட்டிருக்கு...

Labels: , , ,