<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=TAN&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

பேஸ்புக் பக்கங்கள்: பார்ன்படி விளையாட்டு

Apr 26, 2010

நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? இதென்ன கேள்வி... நிச்சயம் இருப்பீர்கள்! அப்படியென்றால் பார்ன்படி பற்றி உங்களுக்குத் தெரியுமில்லையா? தெரிந்தவர்கள் இனிவரும் வரிகளை ஸ்கிப் பண்ணவும்! பார்ன்படி என்பது பேஸ்புக்கில் விவசாயம் செய்யும் விளையாட்டு. ஃபார்ம் வில்லி போல அத்தனை பிரபலமான விளையாட்டு இல்லாவிட்டாலும் எனக்கென்னவோ அதைவிட இது சுவாரசியமான விளையாட்டு என்றே தோன்றுகிறது! ஏனென்றால் அடுத்தவர்களின் தோட்டத்தில் திருட முடிவதுதான்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்? இந்த ஃபார்ம் வில்லி, பார்ன்படி விளையாட்டுக்களைப் பார்த்துத்தான் சொன்னார்கள்! காலையில் விதைத்தால் மாலையில் அறுவடை!

எனக்கென்றால் இந்த விளையாட்டுகளில் அவ்வளவாக ஆர்வமில்லை. இப்படிச் சும்மாயிருக்கிற பத்துப் பேரை பார்ன்படி விளையாடவைத்தால் ஒரு நாய் ஃப்ரீ என்று பார்ன்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அவ்வளவதான்! கிடைப்பது நாய், அதுவும் வெர்சுவல் நாய் என்றாலும் ஃப்ரீயா கிடைக்கிறதே என்று கண்டவனெல்லாம் பார்ன்படி விளையாடு! பார்ன்படி விளையாடு! என்று ரிக்வெஸ்ட் அனுப்பி அனுப்பி உயிரை வாங்கினாணுங்க! இந்தத் தொல்லை பொறுக்காமாலும், அப்படி என்னதான் இந்த விளையாட்டில் இருக்கிறது என்ற ஆர்வத்திலும் நானும் பார்ன்படி விளையாடத் தொடங்கினேன்!

சும்மா சொல்லக்கூடாது... ரொம்ப சுவாரசியமான விளையாட்டு அது! பார்ன்படி வயல் விதைத்த சில மணி நேரங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்! சரியாக அந்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் வேறு எவனாவது அறுத்து எடுத்துக்கொண்டு போய்விடுவான்! இதுக்கென்றே அலார்ம் வைத்து நள்ளிரவில் எழும்பி பார்ன்படி வயல்களில் அறுவடை செய்யும் சீரியஸ் பார்ட்டிகள் எல்லாம் இருக்கிறார்கள்! இப்பிடித்தான் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ன்படி செஞ்சான்... ஒரு கட்டத்துல வெறுத்துப்போய் அதை விட்டுட்டான். அப்புறம் திரும்பவும் பார்ன்படி செய்யத் தொடங்கிட்டான்! ஏன்டான்னு கேட்டேன். சொன்னான்: இல்ல மச்சான்... எல்லாரும் என்னப்பா பார்ன்படி செய்யலியா? பார்ன்படி செய்யலியா? எண்டு கேட்டுட்டே இருக்காங்க... அதான்!

Labels: , ,