பேஸ்புக் பக்கங்கள்: ரெஸ்டோரன்ட் சிட்டி விளையாட்டு
Dec 21, 2010பேஸ்புக் விளையாட்டுகள் பற்றித் தெரியும்தானே? தெரியாதவர்கள் இந்தப் போஸ்ட்டைப் படித்துவிட்டுத் திரும்பி வரவும். இந்த விளையாட்டுகளில் ஒன்றுதான் ரெஸ்டோரன்ட் சிட்டி.
இந்தப் போஸ்ட் ரெஸ்டோரன்ட் சிட்டி விளையாடுவது எப்படி என்பதைப் பற்றியல்ல... பேஸ்புக்கில் இருக்கும் சில சைக்கோக்களைப் பற்றியது!
ரெஸ்டோரன்ட் சிட்டி விளையாட்டில் நாமே சொந்தமாக ரெஸ்டோரன்ட் ஒன்றை உருவாக்கி நடத்தலாம். அதில் நமது பேஸ்புக் நண்பர்களையே சர்வர் வேலைக்கு (?!) அமர்த்தலாம். ரொம்பவும் சுவாரசியமான விளையாட்டு அது.
எனக்கு ஒரு ஃப்ரெண்டு இருக்கான். பேரெல்லாம் சொல்லமாட்டன். அவனுக்கு அவன்கூட படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வோ லவ்வு! ஆனா அவ அவ்ளோ லேசா காதலில் விழுற பார்ட்டி இல்ல. சரியான படிப்ஸ். இருந்தாலும் நம்ம ஃப்ரெண்டும் லேசுப்பட்டவன் இல்லியே... எப்பேர்ப்பட்ட பொண்ணையும் லவ் பண்ண வச்சுடுவான். சோ, அவன் அவள துரத்தித் துரத்தி லவ் பண்ணினான்... அவள அட்ராக்ட் பண்ண என்னென்னவோ செஞ்சு பாத்தான்... ம்ஹூம்! அவ அவன கண்டுக்கவே இல்ல! இதுல நம்ம ஃப்ரெண்டுக்கு சரியான கவல. கடைசில அவகிட்ட "நீ லவ் பண்ணாட்டியும் பரவால்ல... பேஸ்புக்ல சரி ஃப்ரெண்டா அட் பண்ணு" எண்டு சொன்னான். அவளும் போனாப் போவுது என்கிற ரேஞ்சுல அட் பண்ணிகிட்டா.
அப்புறம் கொஞ்சநாள் எல்லாம் நல்லாத்தான் ஓடிக்கிட்டிருந்துச்சு. நான்தான் ஒரு நாள் அவன்கிட்ட அவள பத்தி விசாரிச்சன். அவன் ரொம்பக் கவலயோட "மச்சான், அவ என்கூட பேசுறதே இல்லடா... பேஸ்புக்ல இருந்தும் ரிமூவ் பண்ணிட்டாள்டா" எண்டு சொன்னான்! நான் ஏண்டான்னு கேட்டேன். அதுக்கு அவன் "என்ன கொடும சார் இது?!" ஸ்டைல்ல சொன்னான் ஒரு ரீசன்!
அவன் சொன்னது இதுதான்:
"நான் அவள ரெஸ்டோரன்ட் சிட்டில சர்வராப் போட்டு அவமானப்படுத்திட்டனாம், அதனால என்ன பேஸ்புக்ல இருந்து ரிமூவ் பண்ணிட்டாள். க்ளாஸ்லயும் அவள் என்னோட பேசுறது இல்லடா..."
இப்பிடியும் சைக்கோக்களா? நம்பவே முடியல்ல... இத நெனச்சா சிரிப்ப அடக்க முடியல்ல... ஆபீஸ்ல வேல செஞ்சிகிட்டிருக்ககுள்ளகூட தனியா சிரிச்சுக்கிறன் ... பக்கத்துல இருக்கிறவங்க என்னப் பைத்தியக்காரனப் போல பாக்கிறாங்க.