<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=5909598961843294005&amp;blogName=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=LIGHT&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://minnixs.blogspot.com/search&amp;blogLocale=en&amp;homepageUrl=http://minnixs.blogspot.com/&amp;vt=8948841889471684988" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

மின்னிக்ஸ்

ஒரு வடிவமைப்பாளனின் வலைப்பதிவு

குட்பாய் பேஸ்புக்! ஹலோ ட்விட்டர்! [PART II]

Feb 22, 2011

போன வருஷத்தின் ரீமேக்தான் இந்த வருசமும் போல. பாருங்க போன வருஷம் கிட்டத்தட்ட இதே டைம்லதான் "குட்பாய் பேஸ்புக்! ஹலோ ட்விட்டர்!" என்று ஒரு போஸ்ட் பண்ணினேன். இப்ப அதோட பார்ட் 2 எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு. என்ன கொடும கடவுளே இது.

கொஞ்சம் யோசிச்சிப்பார்த்தா இதுவரைக்கும் என் வாழ்க்கைல நடந்த அத்தனை மோசமான சம்பவங்களுக்கும், கசப்பான நினைவுகளுக்கும் பேஸ்புக்தான் காரணம்னு தோணுது.

உண்மையான அன்பையும் காதலையும் சோசியல் நெட்வொர்க்களில் தேடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! எனது அனுபவங்களின்படி அந்த இரண்டும் இல்லாதவர்கள்தான் சோசியல் நெட்வொர்க்களில் அலைகிறார்கள், விதவிதமான முகமூடிகளை அணிந்தபடி.

நட்பென்னும் காதலென்றும் வந்தவர்களிடம் அளவுக்கதிகமான அன்பைக்கொட்டி, கொண்டாடத்தகுதியில்லாதவர்களை எல்லாம் கொண்டாடி,  படிப்பையும் வாழ்நாளையும் தொலைத்துவிட்டு நிற்கும் நிலை உங்களுக்கும் வேண்டாம். உங்கள் படிப்பை, வேலையை, கனவுகளைக் கொண்டாடுங்கள். பின்னொருநாளில் வாழ்க்கை உங்களைக் கொண்டாடும்.

இதற்கு மேலும் பேஸ்புக் எனக்கு வேண்டாம். இனிவரும் நாட்களை படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடப்போகிறேன். அப்பப்போ போஃஸ்கொயர் விளையாடிக்கொண்டு, ட்வீட் பண்ணிக்கொண்டு, யூட்யூப் பார்த்துக்கொண்டு, கனவுகளைத்துரத்திக்கொண்டு.

Labels: , , , ,