இது என்னுடைய டிசம்பர்
Dec 17, 2011
மழை நாட்கள் பிடிக்கும் எனக்கு. (காதலிப்பவர்களுக்கும் மழை நாட்கள் பிடிக்கும். அதற்கும் எனக்கும் ஏதோ கனெக்ஸன் என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பேற்காது!) மழை நாட்கள் அதிகம் வரும் டிசம்பர் மாதமும் பிடிக்கும்.
கொழும்பில் மூன்றாவது டிசம்பர் இது. முதல் இரண்டு டிசம்பர்களை வர்ணிக்க ஒரு வார்த்தை இருக்கிறது ஆங்கிலத்தில். "க்ரெப்". கொஞ்சமாக மழை பெய்தாலும் இந்த டிசம்பர் முதலிரண்டையும்விட நன்றாகவே இருக்கிறது.
நவம்பர் 30, 2011 நள்ளிரவில் என் பேஃவரிட் பேண்ட், லின்கின்பார்க்கின் திஸ் இஸ் மை டிசம்பர் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அதில் வரும் திஸ் இஸ் மீ அலோன் என்பது போல தனிமையில் இருந்தேன். டிசம்பர் தொடங்கிவிட்டது. ஜன்னல் வழியே பார்க்கிறேன், அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக்கொண்டிருந்த குளிரான அந்த டிசம்பர் இரவில் 375256 கிலோமீட்டர்கள் தொலைவில் பிரகாசித்துக் கொண்டிருந்தது நிலா.